சசிகுமாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

  திஷா   | Last Modified : 19 Sep, 2018 10:42 pm
keerthy-suresh-joins-with-sasikumar

நடிகர் சசிகுமார் தற்போது நாடோடிகள் - 2 படத்தில் நடித்து வருகிறார். சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. தவிர கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்திலும் சசிகுமார் நடித்திருக்கிறார். 

தவிர, இன்னொரு புதிய படத்திலும் கமிட்டாகி இருக்கிறாராம்.  ‘கொம்பு வச்ச சிங்கம்’ என டைட்டில் வைக்கப் பட்டுள்ள இந்தப் படத்தை ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறாராம்.

இதில் சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவிர ‘பிக் பாஸ்’ முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை, சென்னை, பொள்ளாச்சி மற்றும் காரைக்குடியில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம் படக்குழுவுனர். 
newstm.in 
 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close