பூமாராங் படத்திற்காக மொட்டை அடித்துக் கொண்ட அதர்வா!

  Newstm Desk   | Last Modified : 21 Sep, 2018 10:58 am
atharvaa-goes-bald-for-boomerang

இயக்குநர் கண்ணன் இயக்கி வரும் பூமராங் படத்திற்காக நடிகர் அதர்வா மொட்டை அடித்துக்கொண்டார். 

இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு நடிகர் அதர்வா பூமராங் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் கண்ணன் இயக்கி வருகிறார். இதில் அதர்வாவுடன் மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோர் நடிக்கின்றனர். 

இப்படத்தில் மூன்று வேடங்களில் அதர்வா நடித்து வருகிறார். அதில் ஒரு கேரக்டருக்காக அவர்  மொட்டை அடித்துக்கொண்டுள்ளார். இதன் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பேசிய இயக்குநர் கண்ணன், "இந்த மூன்று கேரக்டர்களும் படத்திற்கு முக்கியமானவை. அதனால் நாங்கள் எந்த சமாதானமும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. மூன்று வேடங்களுக்கும் மேக்அப் கலைஞர்கள் மார்க் டிராய் டிசோசா மற்றும் பிரீத்திஷீல் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இதில் ஒரு வேடத்திற்காக அதர்வா மொட்டை அடிக்க வேண்டி இருந்தது. 

அவர் மற்ற படங்களில் நடிக்கும் போது மொட்டை தலை பிரச்னையாக இருக்கும் என்று நானே தயங்கினேன். ஆனால் அதர்வா இந்த முடிவில் உறுதியாக இருந்தார்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close