கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 22 Sep, 2018 07:33 am
chimbu-devan-s-next-is-a-multi-starrer-biggie

இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிம்புதேவன் அடுத்து நடிகர் சிவா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். 
2015ம் ஆண்டு விஜய் நடித்த புலி படத்தை இயக்கியவர் இயக்குநர் சிம்புதேவன். அடுத்து சில படங்களை இயக்கி இருந்தாலும் மீண்டும் வடிவேலுவுடன் 24ம் புலிக்கேசி படத்தை இயக்க இருந்தார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சில காரணங்களுக்காக வடிவேலு ஒதுங்கி விட்டார். மீண்டும் படத்தை தொடங்க தயாரிப்பாளரும் இயக்குநருமான ஷங்கர், வடிவேலுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தீர்வை உருவாக்கவில்லை. 


இந்நிலையில், வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் நிறுவனம் தயாரிக்க உள்ள 6 வித்தியாசமான கதாபாத்திரங்கள் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் சிம்புதேவன். சிவாஜி கணேசன் நடித்த அந்த நாட்கள் மாதிரியான படமாக உருவாக இருக்கிறது. சென்னை-28 படக்குழு இந்தப்படத்தில் நடிக்க உள்ளனர். சிவா, ஜெய், வைபவ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஜனனி ஐயர், உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close