மெர்சல் படத்திற்காக சர்வதேச விருது பெற்றார் நடிகர் விஜய்!

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2018 08:43 am
vijay-won-best-international-actor-from-iara

அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல் படத்திற்காக நடிகர் விஜய் சர்வதேச சிறந்த நடிகர் விருதைப் பெற்றார். 

தெறி படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான படம் மெர்சல். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல  வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த படத்தில் நடித்ததற்காக IARA எனப்படும் INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDSக்கு சிறந்த சர்வதேச நடிகர் மற்றும் சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் நடிகர் விஜய் பரிந்துரைக்கப்பட்டார். விஜய்யுடன் பல சிறந்த நடிகர்கள் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டனர். 

இந்நிலையில் விஜய்க்கு சர்வதேச சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை பெரும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் பெற்றார். 

— IARA AWARDS (@IARA_Awards) September 23, 2018

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close