சர்வதேச விருது பெற்ற விஜய்க்கு விஜயகாந்த் வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2018 12:56 pm
vijaykanth-wishes-vijay

மெர்சல் படத்திற்காக சிறந்த சர்வதேச நடிகர் விருது பெற்ற விஜய்க்கு நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். 

தெறி படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான படம் மெர்சல். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல  வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த படத்தில் நடித்ததற்காக IARA எனப்படும் INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDSக்கு சிறந்த சர்வதேச நடிகர் மற்றும் சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் நடிகர் விஜய் பரிந்துரைக்கப்பட்டார். விஜய்யுடன் பல சிறந்த நடிகர்கள் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டனர். 

இந்நிலையில் விஜய்க்கு சர்வதேச சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை பெரும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் பெற்றார். 

விருது பெற்ற விஜய்க்கு நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், "சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக "சிறந்த சர்வதேச நடிகர்" என்ற விருதை வென்ற நடிகர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close