விஜய்க்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்?

  திஷா   | Last Modified : 26 Sep, 2018 10:28 pm
vijay-deverakonda-to-romance-janhvi-kapoor-in-his-next

தென்னிந்திய சினிமாவைத் தாண்டி பாலிவுட்டிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் சமீபத்தில் ஹீரோயினாக அறிமுகமான படம் ‘தடக்’. ஜூலை மாதம் வெளியான இந்தப் படம் மராத்தியில் ஹிட்டான ‘சைரத்’ படத்தின் ரீமேக்.

முதல் படமே ஜான்விக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இதனையடுத்து ‘டக்த்’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார் அவர். கரண் ஜோஹர் இயக்கும் இதில் ரன்வீர் சிங், கரீனா கபூர், விக்கி கௌஷல், பூமி பெட்நேகர், அணில் கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இதற்கிடையே, 2 தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஜான்வி கபூரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் ஒரு படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறாராம். மற்றபடி, படத்தின் இயக்குநர் மற்ற நடிகர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. தமிழில் அறிமுகமாகும் பட்சத்தில் ஶ்ரீதேவிக்குக் கிடைத்த வரவேற்பை ஜான்வியும் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

newstm.in 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close