இது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் : துருவங்கள் 16 இயக்குநர்

  கனிமொழி   | Last Modified : 27 Sep, 2018 10:32 am
its-a-master-stroke-d16-director-tweet

துருவங்கள் 16 பட இயக்குநர் கார்த்திக் நரேன் செக்க சிவந்த வானம் படத்தை பார்த்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி,விஜய் சேதுபதி , சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா, அதிதி ராவ், ஜோதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம். சென்னையில் பல திரையரங்குகளில் அதிகாலை 5 மணி முதல் காட்சிகள் ஆரம்பித்தன.

முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் மட்டுமின்றி இந்த முறை திரையுலக பிரபலங்களும் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் துருவங்கள் 16, நரகாசூரன் ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் அதிகாலை 5 மணி காட்சி டிக்கெட் புக் செய்துள்ளதை நேற்று தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். 

 

 

இதை தொடர்ந்து தற்போது படம் பார்த்து வந்த கையோடு "செக்க சிவந்த வானம் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக், படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர்." என கார்த்திக் நரேன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close