விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் சன் பிக்சர்ஸ்!

  திஷா   | Last Modified : 04 Oct, 2018 02:16 pm
sarkar-working-stills-releasing-on-sun-pictures-instagram

ஊரெல்லாம் சர்கார் ஃபீவர் தொற்றிக் கொண்டுள்ளது. அதுவும் சமீபத்தில் நடந்து முடிந்த இந்தப் படத்தின் ஆடியோ லாஞ்சில் விஜய் பேசிய விஷயங்கள் தமிழகத்தில் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#SarkarStills #Sarkar

A post shared by Sun Pictures (@sunpictures) on

தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் டீசருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். கத்தி, துப்பாக்கி ஆகியப் படங்களுக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இதனை இயக்கியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Sarkar #SarkarStills

A post shared by Sun Pictures (@sunpictures) on

இதில் விஜய்யுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இதனை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Sarkar #SarkarStills

A post shared by Sun Pictures (@sunpictures) on

தற்போது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு விஷயத்தைக் கையிலெடுத்திருக்கிறது. அதாவது சர்கார் படத்தின் ஸ்டில்கள் ஒவ்வொன்றாக தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப் படும் என முன்னதாக அறிவித்திருந்தது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#SarkarStills #Sarkar

A post shared by Sun Pictures (@sunpictures) on

அதன்படி 15-20 நிமிட இடைவெளியில் படத்தின் ஸ்டில்களை வெளியிட்டு வருகிறது. இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கி, 2 மணிக்குள் 5 படங்களை வெளியிட்டு விட்டது சர்கார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Sarkar #SarkarStills

A post shared by Sun Pictures (@sunpictures) on

பிறகென்ன ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்!

newstm.in 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close