விஜயின் ’மெர்சலால்’ வந்த வினை: ரூ.300 கோடி கேட்டு அடம்பிடிக்கும் சுந்தர்.சி... அலறும் குஷ்பு!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 05 Oct, 2018 03:01 pm
vijay-s-mersal-reaction-rs-300-crore-requested-by-sundar-c

திரைப்படங்களை இயக்கி வந்த சுந்தர்.சி-க்கு இடையில் பயங்கர நடிப்பு பசி! ஆசைக்கு அரிதாரம் பூசிக்கொண்டார். அவர் நடித்த படங்களில் சில ஹிட்டுக்கள்... பல ஷொட்டுக்கள்!

வெறுத்துப்போன சுந்தர்.சி இனி இயக்கம் மட்டுமே என்கிற முடிவுக்கு வந்து விட்டார். நடிப்புப் பக்கம் திரும்பாமல்  ஓடிக் கொண்டிருந்த சுந்தர்.சியை இயக்குநர் வி.இசட்.துரை எப்படியோ மடக்கி விட்டார். இவர் இயக்குகிற திரைப்படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்க சம்மதித்திருக்கிறார் சுந்தர்.சி. ‘பேயே இல்லாத பேய்ப்படம்’ எனறு முதல் கட்ட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

இது ஒருபுறமிருக்க, ரூ.300 கோடியில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக்கத் திட்டமிடப்பட்டிருந்த ‘சங்கமித்ரா’ திரைப்படம் துவங்கப்படாமல் போனதில் சுந்தர்.சி-க்கு பலத்த ஏமாற்றம். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தது. திடீர் பண நெருக்கடியில் அந்த நிறுவனம் சிக்கியதையடுத்து சங்கமித்ரா திரைப்படத் தயாரிப்பு சறுக்கியது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் இந்த பண நெருக்கடிக்கு காரணம் இயக்குநர் அட்லி. விஜயை வைத்து ’மெர்சல்’ படத்தை தயாரித்தது அந்த நிறுவனம். ஆனால், தயாரிப்புச் செலவாக முதலில் சொன்ன பட்ஜெட்டை விட, கிட்டத்தட்ட 50 கோடி ரூபாயை அதிகமாக்கி விட்டார் அட்லி. படம் வெளியாகி முதலுக்கே பங்கமாக்கிவிட்டுப்போனது. 

இதனால், சுந்தர்.சி-யின் சங்கமித்ரா இன்னும் சங்கமிக்கவில்லை. இப்போது  சங்கமித்ராவை நாமே கையில் எடுக்கலாமா என்று திட்டமிடுகிறாராம் சுந்தர்.சி. ஆனால், அவரது மனைவி குஷ்பு உடன்படவில்லை எனக்கூறப்படுகிறது.  பத்து, இருபது கோடி படம் என்றால் பரவாயில்லை. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டை நம்மால் சமாளிக்க இயலாது. வேறு நிறுவனத்தை பாருங்கள் என முட்டுக்கட்டை போட்டுவிட்டாராம் குஷ்பு!
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close