என் மீதான அவதூறுகளில் இதுவும் ஒன்று: பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வைரமுத்து

  Newstm Desk   | Last Modified : 10 Oct, 2018 02:56 pm

vairamuthu-tweets-about-allegations-on-him

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தொடர்ந்து பாலியல் குற்றசாட்டுகள் தெரிவித்து வரும் நிலையில், "இவை தன் மீதான பாலியல் அவதூறுகளில் ஒன்று, உண்மையைக் காலம் சொல்லும்" என அவர் பதில் அளித்துள்ளார்.

Metoo மூலம் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாடகி சின்மயி தனக்கும், தனக்கு தெரிந்தவர்களுக்கும் நேர்ந்த தொந்தரவுகள் குறித்து தெரிவித்து வருகிறார். 

இதில் அவர் பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறார். முக்கியமாக கவிஞர் வைரமுத்து மீதான அவரது பாலியல் குற்றச்சாட்டுகள் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் அவர் மட்டும் அல்லாமல் பல பெண்களும் பெயர் தெரிவிக்காமல் சின்மயி மூலம் வைரமுத்து குறித்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

இதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த கவிஞர் வைரமுத்து தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்" என்று பதிவிட்டுள்ளார். 

 

 

இதற்கு உடனடியாக பதில் அளித்துள்ள சின்மயி, அவர் பொய்யர் என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close