மீண்டும் தமிழுக்கு வரும் டாப்ஸி!

  திஷா   | Last Modified : 11 Oct, 2018 01:48 pm
tapsee-s-next-in-tamil

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படத்தில் ஆங்கிலோ - இந்தியன் பெண்ணாக நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. பிறகு ஆரம்பம், காஞ்சனா 2 என ஒரு சில வெற்றிப் படங்களில் நடித்தார். இவர் கடைசியாக தமிழில் நடித்தப் படம், 2015-ல் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை. அதன் பிறகு தமிழில் நடிக்காமல், தனது முழு கவனத்தையும் இந்தி சினிமாவில் செலுத்தி வருகிறார். 

எனவே டாப்ஸி தமிழில் நடித்து மூன்றாண்டுகளுக்கும் மேலாகிறது. இந்நிலையில் 'கேம் ஓவர்' என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் டாப்ஸி. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே நயன்தாராவை வைத்து 'மாயா' என்ற படத்தை இயக்கியவர். தற்போது எஸ்.ஜே.சூர்யாவை ஹீரோவாக வைத்து 'இறவாக்காலம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை ‘Y NOT ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதுங். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதனை 'கேம் ஓவர்' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘Y NOT ஸ்டூடியோஸ்' அவர்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளது. இதில் மாற்றுத் திறனாளியாக டாப்ஸி நடிக்கிறார் என ஃபர்ஸ்ட் லுக்கின் மூலம் விளங்குகிறது. 
 
newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close