தமிழக மீ டு சர்ச்சையில் சிக்கிய அடுத்த பிரபலம்

  திஷா   | Last Modified : 11 Oct, 2018 03:14 pm

singer-karthik-feels-metoo-heat

பாலியல் தொல்லைகளுக்கு ஆளான பெண்கள் வெளிப்படையாக மீ டூ என்ற இயக்கத்தின் மூலம் பேசி வருகிறார்கள். உலகம் முழுவதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த இயக்கம் தற்போது இந்தியாவிலும் பகீர் கிளப்பி வருகிறது. 

குறிப்பாக தமிழகத்தில் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தான் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப் பட்டதாக, கவிஞர் வைரமுத்துவின் மேல் பாடகி சின்மயி ட்விட்டரில் வெளியிட்டு திகில் கிளப்பினார். 

இந்நிலையில் மற்றுமொரு பிரபலமும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். பத்திரிக்கையாளர் சந்தியா மேனனுக்கு, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் பாடகர் கார்த்திக் தன்னிடம் தவறான முறையில் நடந்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பொது விழாவில் கலந்துக் கொண்ட போது, கார்த்திக் அந்த பெண்ணின் உடலைப் பற்றி பேசி, தன்னை அசெளகரியத்துக்கு ஆளாக்கியதாக குரிப்பிட்டுள்ள அவர், தமிழில் எழுத முடியாத விஷயங்களையும் கூறியுள்ளார். 

வெளிநாட்டு டூர்களின் போது, மற்ற பெண் பாடகிகளுக்கு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கும் வெறுக்கத் தக்க நோயாளி எனவும் கார்த்திக்கை சாடியுள்ளார். 

இதனை வைத்துப் பார்க்கும் போது பெயர் குறிப்பிடாத அந்தப் பெண்ணும் பாடகியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. 

இப்படி பிரபலங்களின் பிம்பங்கள் சுக்கு நூறாக உடைந்து வரும் நிலையில், அடுத்து யாரோ என்ற எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்கள் மக்கள். 

இதற்கிடையே இந்த ட்வீட்டுக்கு பதிலளித்து ரீ ட்வீட் செய்திருக்கும் பாடகி சின்மயி, "நேற்று தான் சக ஜட்ஜாக கார்த்திக் இருக்கும், ஒரு நிகழ்ச்சி முடிந்தது. இப்போது நான் பாதிக்கப் பட்ட பெண்ணை தான் நம்புகிறேன். மன்னித்து விடுங்கள் கார்த்திக், உங்கள் நேரம் முடிந்து விட்டது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

தவிர, இலங்கை கிரிக்கெட் வீரர் லஸித் மலிங்காவும் இந்த பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மும்பை ஹோட்டலில் அவரால் பாதிக்கப் பட்ட பெண், சின்மயிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். 

 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close