ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் சண்டக்கோழி 2-வில் இருக்கும் - வரலட்சுமி

  திஷா   | Last Modified : 11 Oct, 2018 04:12 pm
sandakozhi-will-be-a-family-entertainer-varu-sarath

நடிகை வரலட்சுமி சரத்குமார் சர்கார், சண்டக்கோழி 2, கன்னிராசி, அம்மாயி உள்ளிட்ட பல படங்களில் தற்போது பரபரப்பாக நடித்து வருகிறார். இதில் விஷால் ஹீரோவாக நடித்திருக்கும் சண்டக்கோழி 2  திரைப்படம் வரும் 18-ம் தேதி வெளியாகிறது. 

இயக்குநர் லிங்குசாமி இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ் கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

சமீபத்தில் இந்தத் திரைப்படத்தைப் பற்றி பேசிய நடிகை வரலட்சுமி, " சண்டக்கோழி 2 திரைப்படத்தில் வேலைப்பார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். இந்தத் திரைப்படத்தில் என்னுடைய செளகரிய சூழலில் இருந்து வெளியேறி நான் நடித்துள்ளேன். இதில் கிளைமேக்ஸ் காட்சி மிகவும் சிறப்பாக வந்துள்ளது. ஆக மொத்தம் ரசிகர்கள் விரும்பும் அத்தனையும் இந்த சண்டக்கோழி திரைப்படத்தில் இருக்கும்" என்றார். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close