கார்த்தியின் 'தேவ்' டப்பிங் தொடக்கம்!

  திஷா   | Last Modified : 11 Oct, 2018 04:37 pm

karthi-s-dev-movie-s-dubbing-begins

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் 'தேவ்'. இதனை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 

பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் S. லட்சுமண் இதனை தயாரித்து வருகிறார். படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். இன்று இந்தத் திரைப்படத்தின் டப்பிங் பூஜையுடன் துவங்கியுள்ளது. முதல் நாளான இன்று படத்தின் நாயகன் டப்பிங் பேசி இதனை துவக்கி வைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து நாளை கார்த்தி மற்றும் படக்குழு குலு  மணாலிக்கு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்லவிருக்கிறது.

குலு மணாலியில் பெய்த கன மழை, பெரும் வெள்ளம் மற்றும் நில சரிவு காரணத்தால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் தேவ் குழுவினர் சென்னை திரும்பினர். தற்போது அங்கு எடுக்கப் பட வேண்டிய காட்சிகளைப் படமாக்க மீண்டும் செல்கின்றனர். இதனை முடித்துவிட்டு விரைவில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர். 

  newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close