கத்திக்கும் சர்காருக்கும் இத்தனை ஒற்றுமைகளா?

  திஷா   | Last Modified : 11 Oct, 2018 04:38 pm

sarkar-goes-the-kaththi-way

ஒருவழியாக சர்கார் திரைப்படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது.  

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. 

ஆயுத பூஜையை முன்னிட்டு, வரும் 19-ம் தேதி சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாவதாக நேற்றே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் நான்காண்டுகளுக்கு முன்னர், 2014-ல் இதே அக்டோபர் 19-ம் தேதி தான் விஜய்யின் கத்தி டீசரும் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அந்தத் திரைப்படமும், தீபாவளிக்கு வெளியானது குறிப்பிடத் தக்கது. 

தற்போது இவைகளை ஒப்பிட்டு, சர்கார் கத்தியை விட ஒருபடி அதிகமான சரவெடியாக இருக்கும் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். 

  newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close