மீ டூ இயக்கத்தைப் பற்றி வாய் திறந்த உச்ச நட்சத்திரம்!

  திஷா   | Last Modified : 11 Oct, 2018 06:01 pm

amitabh-bachan-on-metoo-movement

இந்தியாவில் மீ டூ இயக்கம் பல அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. குறிப்பாக திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் இந்தச் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். 

சமீபமாக தனுஶ்ரீ தத்தா - நானா படேகர் விவகாரம் பாலிவுட்டில் பற்றி எரிந்து வருகிறது. இதுகுறித்து மற்ற பிரபலங்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்திருந்த நிலையில், இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் இது குறித்து வாய் திறவாமல் இருந்து வந்தது பாலிவுட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வந்தது. 

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அமிதாப் பச்சன், "எந்தப் பெண்ணும் இது போன்றதொரு பாலியல் சங்டங்களுக்கு ஆளாகக் கூடாது. குறிப்பாக வேலை செய்யும் இடங்களில் இது  மாதிரியான துயரங்களுக்கு ஆளாகக் கூடாது. இவ்வாறான பிரச்னைகளை உடனடியாக தகுந்தோரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். 

சுய ஒழுக்கமும், சமூக சூழலும் பள்ளி கல்வியிலேயே கற்பிக்கப் பட வேண்டும். நாளுக்கு நாள் இந்தப் பிரச்னை நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. பெண்கள், குழந்தைகளை இவ்வாறான சீண்டலில் இருந்து காத்திட, சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். 

  newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close