த்ரிஷாவுக்கு காயகல்பம்... கிடுகிடுக்கும் நயன்தாரா..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Oct, 2018 06:10 pm

trisha-is-kayakalpam-nayanthara-fear

கிட்டதட்ட ஓய்வுதான் என்கிற அளவுக்கு த்ரிஷாவை வாழ்க்கையின் ஓரத்திற்கே தள்ளிக் கொண்டு போன தமிழ்சினிமா, திடீரென அவருக்கு காயகல்பம் கொடுத்து கவுரவிக்க துவங்கிவிட்டது.

இளமை அமைவதெல்லாம் இதயம் கொடுத்த வரம் என்றால், த்ரிஷா அதற்கும் பொருத்தமே. 96 படத்தில் இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் ஏகப்பட்ட காதல் காட்சிகள். 96 படம் ஓடும் திரையரங்கங்களுக்கு பர்தா போட்டுக் கொண்டு போன த்ரிஷாவுக்கு அநியாயத்துக்கு ஆச்சர்யம். விஜய் சேதுபதியை விட, த்ரிஷாவின் ரியாக்சன்களை கைதட்டி விசிலடித்து கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.

தனக்கு இன்னொரு விண்ணை தாண்டி வருவாயா என்று அவரே சிலருக்கு போன் அடித்து பேசுகிற அளவுக்கு உற்சாகமாகிவிட்டார். அடுத்து ரஜினியுடன் ’பேட்ட’ படத்தில் நடித்து வருவதால் அவருக்குள் உற்சாகம் ஊற்றெடுத்து வருகிறது. சினிமா மார்கண்டேயினி என்ற பட்டத்தை இனி நயனும், த்ரிஷாவும் ஆளுக்கு பாதியாக பிரித்துக் கொள்வார்கள். போட்டியே இல்லாத லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தராவிற்கு த்ரிஷாவின் இந்த திடீர் புகழ் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், இன்னும் முன்னெச்சரிக்கையாக, இருந்து திறமை காட்ட முடிவெடுத்திருக்கிறாராம் நயன்தாரா.

எல்லாம் 96 என்கிற ஒரே ஒரு படத்தால் வந்த மாயம். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close