• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

#Metoo விவகாரம்: புதிய படத்தை உதறித்தள்ளிய நடிகர் அமீர்கான்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Oct, 2018 06:15 pm

metoo-geetika-tyagi-lauds-aamir-khan-for-refusing-to-work-with-molestation-accused-subhash-kapoor

தான் கதாநாயகான நடிக்க இருந்த படத்தை இயக்க இருந்த இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததால் அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை என அமீர்கான் விலகியுள்ளார். 

பல்வேறு துறைகளில் இருக்கும் பெண்களும் தங்கள் வாழ்நாளில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தொந்தரவுகளை பெரிதாக வெளிப்படுத்த இயலாத சூழல் இருந்த நிலையில் தற்போது திரையுலக பெண் பிரபலங்கள் METOO என்ற ஹெஷ்டேக் தொடங்கி அதில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகளை வெளிப்படையாகக் கூறினார். சிலர் நேரடியாக தன்னைத் தொந்தரவு செய்த நபரையே அம்பலப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அமீர்கான், இயக்குநர் சுபாஷ் கபூர் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். பாலிவுட் தயாரிப்பாளர் குல்ஷன் குமாரின் வாழ்க்கை வரலாற்று படமான இந்தபடம் ‘மொகுல்’ என்ற பெயரில் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் சுபாஷ் கபூர் மீது கீதா தியாகி என்ற நடிகை அளித்த பாலியல் புகாரையடுத்து அந்த படத்திலிருந்து விலகுவதாக அவரது மனைவி கிரண் ராவ் அமீர்கான் இணைந்து கூட்டாக அறிவித்துள்ளனர். இதற்கிடையே, ஆமீர் கானுடன் இணைந்து இந்தத் திரைப்படத்தை தயாரிக்க இருந்த டி-சீரிஸ் நிறுவனம், ‘மொகுல்’ புராஜெக்டில் இருந்து சுபாஷ் கபூரை அதிரடியாக நீக்கியுள்ளது. 
 

Newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close