வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2018 05:02 pm
hayma-malini-about-chinmayi-s-statements-on-metoo

சின்மயிக்கு திரையுலகினர் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், வைரமுத்து உத்தமர் இல்லை என்றும் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மீடூ மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். மேலும் பலர் வைரமுத்து குறித்து பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து மறைந்த பாடகரும் நடிகருமான மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வைரமுத்துவைக் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில், "தமிழ்த் திரையுலகம் ஏன் சின்மயிக்கு ஆதரவாக இல்லை என்பது எனக்குப் புரியவில்லை. வைரமுத்து ஒன்றும் துறவி இல்லை என்பது தமிழ் திரையுலகினருக்கு தெரியும் என்பது உறுதி. சின்மயி ஏன் இதை பத்து வருடங்களுக்கு முன் சொல்லவில்லை என்று ஏன் கேட்க வேண்டும். 

இப்போது அவர் புகார் சொல்லியுள்ளார், இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். நாம் ஏன் வைரமுத்துவை கேள்வி கேட்பதில்லை? சமூகம் ஏன் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவரைக் கேள்வி கேட்கிறது?  என்ன ஒரு ஒருதலைப்பட்சமான துறை இது. நான் சன் மியூசிக் சேனலில் இருந்தபோது, வைரமுத்து அங்கு வேலை செய்த ஒரு இளம் தொகுப்பாளரைத் தொடர்பு கொள்ள முயன்றதை அறிவேன். அவரைப் பற்றி பத்து வருடங்களுக்கு மேலாக பல தளங்களில் பேசியிருக்கிறேன். குரலற்றவர்களின் குரலாக ஒலித்த சின்மயிக்கு தலைவணங்குகிறேன். இந்தத் துறை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது" என பதிவிட்டுள்ளார். வைரமுத்துவின் மீது மீடு ஹேஷ்டேக் மூலம் பாலியல் குற்றசாட்டு எழுப்பிய 11வது பெண் ஹேமமாலினி என்பது குறிப்பிடத்தக்கது. 

#newstm.in.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close