ராட்சசன் இயக்குநருடன் கை கோர்த்த தனுஷ்!

  திஷா   | Last Modified : 18 Oct, 2018 04:47 pm
dhanush-s-next-with-ratsasan-director

பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் தற்போது வடசென்னை திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. 

தற்போது இவரின் அடுத்தப் படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ள 'ராட்சசன்' திரைப்பட இயக்குநரான ராம்குமார்,  தனுஷின் அடுத்தப் படத்தை இயக்குகிறாராம். ஃபேன்டஸி கலந்த காமெடி களத்தில் இந்தத் திரைப்படம் உருவாக இருக்கிறதாம். 

தவிர வெற்றிமாறன் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்படும் திரைப்படத்தில் தனுஷ் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கடுத்து ராம்குமாரின் படத்தில் நடிப்பாராம். இதனை முடித்து விட்டு வட சென்னை 2 திரைப்படத்தின் வேலைகளை மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி தொடங்கவிருக்கிறதாம். 
newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close