சர்கார் டீசர்: விஜய் ரசிகர்களுக்காக பிரபல தியேட்டரில் சிறப்பு ஏற்பாடு

  Newstm Desk   | Last Modified : 19 Oct, 2018 08:13 am
sarkar-teaser-to-be-screened-at-rohini

சர்கார் படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இன்று பிரபல ரோகினி திரையரங்கில் விஜய் ரசிகர்களுக்காக எல்.இ.டி திரையில் சிறப்பாக ஒளிப்பரப்பாக இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் அடுத்த மாதம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இதன் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

பெரும் எதிர்ப்பார்புடன் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் வகையில் சென்னையில் பிரபல திரையரங்கான ரோகினியில் இன்று மாலை டீசர் சிறப்பு காட்சி ஒளிப்பரப்பாக இருக்கிறது. இன்று 5.45 மணியளவில் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மாலை 6.15 வரை நடைபெறுகிறது.

பாடல்கள், இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை தொடர்ந்து 6 மணிக்கு டீசர் ஒளிப்பரப்பாகிறது.இதனை பார்க்க அனுமதி இலவசம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close