தனுஶ்ரீ தத்தாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது: நானா படேகர் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 19 Oct, 2018 09:30 am
nana-patekar-responds-to-film-body-notice

நடிகை தனுஶ்ரீ தத்தா தன் மீது கொடுத்துள்ள பாலியல் புகார் ஆதாரமற்றது என்று சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் சங்கத்திடம் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட்டில் நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியிருக்கும் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 2008-ல் நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று தனுஸ்ரீ புகார் அளித்துள்ளார். இதனால் நடிகர் படேகருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனுஸ்ரீ தனது புகாரில், 2008-ல் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது நடிகர் நானா படேகர் பல முறை பாலியல் துன்புறுத்தல் செய்தார். தன்னுடைய அரசியல் செல்வாக்கு மூலம் என்னை அடி பணிய வைத்தார் என்று கூறியுள்ளார்.

இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் சங்கம் நானாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதில் அளித்துள்ள நானா, "தனுஶ்ரீ தத்தாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அவர் என் மீது பொய் புகார் கூறுகிறார். இதனை சட்டப்படி சந்திக்க உள்ளேன்" என கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close