விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய ரஜினி... பரபரக்கும் அப்டேட்ஸ்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 20 Oct, 2018 12:55 pm
rajini-to-contest-for-vijay

ரஜினிகாந்த் நடிக்கும் ’பேட்ட’ படத்திலிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், "குறிப்பிட்டிருந்த தேதிக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே 'பேட்ட' பட படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சன் பிக்சர்ஸ், ஒளிப்பதிவாளர் திரு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். அனைவருக்கும் 'விஜயதசமி' வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள பதிவில், "நன்றி தலைவா. கனவு நனவாகியுள்ளது. இது சாத்தியமாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி. தலைவர் படத்தை இயக்கி முடித்துவிட்டேன் என இப்போதுவரை நம்ப முடியவில்லை. இன்னும் கனவுபோலவே உள்ளது" எனும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்தது எனும் இந்த அறிவிப்பு பலரைக் குஷியாக்கினாலும் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட காலமானது தற்போது இணையத்தில் விவாதிக்கப்பட்டுவருகிறது. காரணம், விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் டீசர். இந்த டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியான நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே தனது இந்த ’பேட்ட’ படம் குறித்த அப்டேட்டை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ரஜினி.
சர்கார் டீசருக்குப் போட்டியாகவே ரஜினியின் 2.O படத்தில் இடம்பெற்ற இந்திர லோகத்து சுந்தரியே’’ லிரிக்கல் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.

சர்கார் டீசர் இணையத்தில் கவனம் பெற்றுவரும் நிலையில் திடீரென வெளியிடப்பட்ட பேட்ட பட அப்டேட்டும், 2.0 லிரிக்கல் வீடியோவும் சர்காருக்குப் போட்டியாக முன்முடிவுடன் வெளியிடப்பட்டதே எனச் சொல்கின்றனர் நெட்டிசன்கள். சர்கார், பேட்ட ஆகிய இரு படங்களையும் தயாரிப்பது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close