நடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு நவம்பர் 14,15ல் திருமணம்

  Newstm Desk   | Last Modified : 21 Oct, 2018 04:50 pm
deepika-ranveer-announce-wedding-date

பிரபல பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனேவிற்கு நவம்பர் மாதம் 14 மற்றும் 15ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. 

நடிகை தீபிகா படகோனே தனது சமூக வலைதள பக்கங்களில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில் அடுத்த மாதம் 14 மற்றும் 15ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார். 

ரன்வீர் மற்றும் தீபிகா ஆகியோர் ராம் லீலா படத்தில் நடித்த போதே காதலித்து வருகின்றனர் என்ற தகவல்கள் வெளியாகின. பின்னர் அவர்கள் காதல் குறித்து வெளிப்படையாக தெரிவித்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close