யுவன் தயாரிப்பில் இளையராஜா இசையமைப்பில் நடிக்கிறார் விஜய் சேதுபதி!

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 09:21 am
u1-records-to-produce-vjs-movie

யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் நிறுவனம்  தயாரிக்க இருக்கும் இரண்டாவது படத்தை சீனுராமசாமி இயக்குகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒய்.எஸ்.ஆர் என்னும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் பியார் பிரேமா காதல் படத்தை தயாரித்தார். அந்த படம் பெரும் வெற்றியை அடைந்த நிலையில் தற்போது இந்த நிறுவனம் அடுத்து படத்தை தயாரிக்க இருக்கிறது. 

யுவன் தயாரிக்கும் இந்த படத்தை சீனு ராமசாமி இயக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ளார். மேலும் இந்தபடத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார். 

 

 

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமும் படக்குழுவினரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.

முன்னதாக பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளனும் ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close