கீர்த்தி சுரேஷுக்கு குறி வைத்த அஜித்... நடுக்கத்தில் நயன்தாரா!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 23 Oct, 2018 05:42 pm
keerthi-suresh-who-wanted-ajith-nayantara-in-the-shade

கோலிவுட்டின் அத்தனை முன்னணி நடிகர்களோடும் நடித்து விட்டார் கீர்த்தி சுரேஷ். இப்போது நயன்தாராவுக்கு இணையான சம்பளம் தருவதற்கு தயாரிப்பாளர்கள் முன்வந்து விட்டார்கள். 

இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷின் ஆண்டு. அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது என்பதால், பெரிய நடிகர்களும் கீர்த்தி சுரேஷோடு டூயட் பாடத்தான் விரும்புகிறார்களாம். இதுவரை கோலோச்சிக் கொண்டிருந்த நயன்தாராவின் இடம் இவரால் ஆட்டம் காணத் தொடங்கி விட்டது என்கிறார்கள். அத்தோடு படு பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால் இப்போது ஒரு தமிழ்ப்படத்தில் கூட நடிக்கைவில்லை. இதற்கும் கீர்த்திதான் காரணம் என்கிறார்கள்.

 

பொதுவாக ஹீரோயின் யாரென்றெல்லாம் பொருட்படுத்தாமல் நடிக்கும் அஜித்தே கூட அடுத்த படத்துக்கு, “அந்தப் பொண்ணை பேசிப் பார்க்கலாமா?” என்று கேட்குமளவுக்கு கீர்த்தி சுரேஷின் கொடி கோலிவுட்டில் உச்சத்தில் பறக்கிறது.

சமீபத்தில் இறக்குமதியான பாலிவுட்  நாயகிகளின் திறமைகளெல்லாம் பப்படமாகிவிட்ட நிலையில் கீர்த்தி சுரேஷின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் என்னவென்று அறிந்துகொள்ள அடுத்தகட்ட நாயகிகள் ஆவலாக இருக்கிறார்களாம்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close