முன்னணி இயக்குநர் மீது அமலா பால் பாலியல் புகார்! - அதிர்ச்சியில் திரையுலகம்

  திஷா   | Last Modified : 24 Oct, 2018 02:49 pm
amala-paul-on-susiganesan

மீ டூ விவகாரம் சூடு பல விதமான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் மிகப் பெரிய பரபரப்பை கிளப்பி வருகிறது. பாதிக்கப் பட்டோரின் குறுஞ்செய்திகளை சின்மயி, அவரது ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். அதோடு தனக்கு, கவிஞர் வைரமுத்து பாலியல் ரீதியான தொந்தரவுகளைக் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். 

இந்நிலையில் ஆவணப் பட இயக்குநர் லீனா மணிமேகலை, இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் அளித்தார். இதை உடனடியாக மறுத்த அவர், இதனை சட்ட ரீதியாக எதிர் கொள்வேன் எனவும் தெரிவித்தார். 

இதற்கிடையில் தற்போது இது குறித்து நடிகை அமலா பால் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். திருட்டு பயலே 2 திரைப்படத்தில் நடிக்கும் போது, சுசி கணேசனின் இரட்டை அர்த்த பேச்சுகள், தேவையே இல்லாமல் உரசிக் கொண்டு பேசும் சுபாவம் ஆகியவை தன்னை மிகுந்த சங்கடத்துக்கு ஆளாக்கியதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார். 

இதனால் மீண்டும் பரபரப்புக்கு ஆளாகியுள்ளது, தமிழ் திரையுலகம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close