தியேட்டர்களில் சிசிடிவி கேமரா: தமிழ்ராக்கர்ஸுக்கு செக் வைத்த விஷால்!

  Newstm Desk   | Last Modified : 24 Oct, 2018 03:18 pm
all-the-theatres-in-tamil-nadu-should-place-cctv-cameras-before-diwali

 தீபாவளிக்குள் அனைத்து தியேட்டர்களிலும் சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும் என்று தமிழ்த்திரைப்பட தாயரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நடிகர் விஷால் தலைமையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திருட்டு வீடியோ பைரசியைத் தடுப்பதற்காகக் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் உள்/வெளி அரங்குகள், வாசல்கள், பார்க்கிங் பகுதிகளில் சிசிடிவி பொருத்த வேண்டும். வருகிற நவம்பர் 6 தீபாவளி தினத்திற்குள் அது பொருத்தப்பட வேண்டும். பொருத்தப்பட்ட கேமராக்கள், 24 மணி நேரமும் தங்கு தடையின்றி பதிவு செய்யப்படும். வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் சிசிடிவி பொருத்தாத திரையரங்குகளுக்கு, திரைப்படம் தரப்பட மாட்டாது. இனி அனைத்துக் காட்சிகளிலும், 2 நபர்கள் திரையரங்குக்குள் முழு நேரக் கண்காணிப்புப் பணிக்கு அமர்த்தப்படுவர்.

ஒவ்வொரு முறை படம் ஆரம்பிக்கும் முன்னர், திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்படும். படம் பார்க்கவரும் பொதுமக்களிடம் கேமரா இருக்கிறதா என்று கட்டாயமாகப் பரிசோதனை செய்யப்படும்.  தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்த குழு ஒன்று அமைக்கப்படும். மேற்படி விஷயம் குறித்து ஏதேனும் பிரச்னை ஏற்படுமாயின், அதனை அந்தக் குழுவில் வைத்து ஆலோசித்து, அதற்கு தீர்வு காண வேண்டும். திருட்டு வீடியோவை ஒழிக்க இந்தக் குழு கடுமையாகப் போராடும்.

தீபாவளி அன்று விஜய்யின் சர்கார் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஷாலின் இந்த முடிவு திருட்டுத்தனமாக படத்தை இணையத்தில் வெளியிட்டு வரும் தமிழ்ராக்கர்ஸ் இணைய தளம் உள்ளிட்ட பல்வேறு முறைதவறி நடக்கும் தளங்களுக்கு செக் வைக்கும் விதத்தில் அமைந்துள்ளதாக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close