கபில் தேவ் தான் 'தேவ்' படத் தலைப்பிற்கு காரணம்: இயக்குநர் ரஜத்

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2018 11:41 am
dev-director-about-title

கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மீதான ஈர்ப்பினால் தான் 'தேவ்' என தலைப்பு வைத்திருப்பதாக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் 'தேவ்'. இதனை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 

பிக்ச்சர்ஸ் S. லட்சுமண் இதனை தயாரித்து வருகிறார். படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். இந்தப் படத்திற்காக குலு மணாலி சென்றிருந்த போது, அங்கு பெய்த கனமழை மற்றும் பெரும் வெள்ளம் காரணங்களால், படப்பிடிப்பு நடத்த முடியாமல் தேவ் குழுவினர் சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டு இருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்கு தேவ் என ஏன் தலைப்பு வைத்தார்கள் என்பது குறித்து இயக்குநர் ரஜத் தெரிவித்துள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மீதான ஈர்ப்பினால் தேவ் என தலைப்பு வைத்துள்ளதாக தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close