விறுவிறுப்பாக வளர்ந்து வரும் தனுஷின் திரைப்படம்!

  திஷா   | Last Modified : 29 Oct, 2018 01:47 pm
update-on-dhanush-s-next-directorial

நடிகர் தனுஷின் நடிப்பில் வெளிவந்துள்ள, வட சென்னை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். 

தவிர, எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு ராட்சசன் இயக்குநர், ராம்குமாரின் புதிய படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். 

மேலும், பவர் பாண்டி திரைப்படத்தைத் தொடர்ந்து தனது இரண்டாவது படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ். இந்தப் படத்தில் நாகர்ஜூன், சரத்குமார், ஶ்ரீகாந்த் ஆகியோருடன் இணைந்து தனுஷும் நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இதற்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். 

ஏற்கனவே இந்தப் படத்தில், மூன்று பாடல்களுக்கு இசையமைத்து முடித்துவிட்டாராம் ஷான். இதனை சமீபத்தில் நடந்த ஷான் ரோல்டனின் லைவ் கான்சர்டில் தெரிவித்தார் நடிகர் பிரசன்னா. 

தனுஷ் - ஷான் கூட்டணியில் வெளியான, பவர் பாண்டி போல் இந்தப் படத்தின் பாடல்களும் பெரியளவில் பேசப்படும் என்கிறார்கள் ரசிகர்கள். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close