ப்யார் ப்ரேமா காதலின் பின்னணி இசை குறித்து யுவன்!

  திஷா   | Last Modified : 29 Oct, 2018 02:08 pm
pyaar-prema-kaadhal-bgm-s-soon-yuvan

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் சார்பில் முதல் தயாரிப்பாக வெளிவந்த திரைப்படம் 'ப்யார் ப்ரேமா காதல்'. 

இதனை அறிமுக இயக்குநர் இளன் இயக்கியிருந்தார். ஹரீஷ் கல்யாண், ரைஸா நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். காதலை களமாகக் கொண்ட இத்திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

குறிப்பாக, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த பாடல்களும், பின்னணி இசையும், ரசிகர்களின் காதில் தேன் பாய்ச்சின. இதுவரை 90'ஸ் கிட்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த யுவன், இந்தத் திரைப்படத்தின் மூலம் 2000'ஸ் கிட்ஸின் ப்ளே லிஸ்டில் இடம் பிடித்தார். 

இந்நிலையில் ப்யார் ப்ரேமா காதல் திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்வை முழுவதும், விரைவில் வெளியாகும் என அறிவித்திருக்கிறார் யுவன்!

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close