நந்திதா நடிக்கும் கல்கி!

  திஷா   | Last Modified : 30 Oct, 2018 01:40 pm
nandita-swetha-s-new-movie-titled-as-kalki

நடிகை நந்திதா ஸ்வேதா நடித்திருந்த 'அசுரவதம்' திரைப்படம் இந்தாண்டு வெளியாகியிருந்தது. தொடர்ந்து செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை உட்பட வணங்காமுடி, தேவி 2, டானா, 7, நர்மதா' ஆகிய திரைப்படங்களில் பரபரப்பாக இருக்கிறார். 

தவிர தெலுங்கு திரையுலகிலும் படு பிஸியாக வலம் வருகிறார்.  

இந்நிலையில், மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க நந்திதா கமிட்டாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கல்கி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக ராஜசேகர் நடிக்கிறார். ‘Awe' படத்தை இயக்கிய பிரஷாந்த் வர்மா இயக்கவிருக்கிறார். 80-களில் நடக்கும் துப்பறியும், த்ரில்லர் படமாக இது உருவாகிறது. 

கல்கி திரைப்படத்தைப் பற்றி மற்ற விஷயங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. 
 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close