விஜய் சர்கார் அமைக்க எனது செங்கோலை பரிசளிக்கிறேன்: வருண் ராஜேந்திரன்

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2018 02:11 pm
varun-rajendran-s-statement-after-hc-verdict-on-sarkar-issue

நடிகர் விஜய் சர்கார் அமைக்க தனது செங்கோலை அவருக்கு பரிசாக தருவதாக சர்கார் படத்தின் கதை கரு தன்னுடையது தான் என முறையிட்ட வருண் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

'சர்கார்' படம் வருண் ராஜேந்திரனின் கதை தான் என்றும், படத்தில் அவர் பெயர் போட்டு நன்றி தெரிவிக்கப்படும் என ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் கூறியதையடுத்து 'சர்கார்' பட விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வருண் ராஜேந்திரன், "நான் அங்கிகாரத்திற்கு தான் போராடினேன். படத்தை தடை செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமில்லை. படத்தில் கதை என, என்னுடைய பெயரை போடுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அப்படி என் பெயரை இணைத்தால் மீண்டும் சென்சார் வாங்க வேண்டி இருக்கும். எனவே எனது பெயர் டைட்டில் கார்டில் மட்டும் வரும். 

விஜய், சர்கார் அமைக்க எனது செங்கோலை தீபாவளி பரிசாக அவருக்கும், அவர் குடும்பாருக்கும், அவர் ரசிகர்களுக்கும் தருகிறேன்" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close