ஏ.ஆர்.முருகதாஸின் பாவத்தை கழுவிய விஜயகாந்த்- நயன்தாரா... விஜய் பேரதிர்ச்சி..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 30 Oct, 2018 02:14 pm

a-r-murugadoss-who-stole-stories-vijay-in-furious

வழுக்கை தலையில் முடி நடுவது பேஷனாகி விட்டது என்றால், வறண்ட தலைக்குள் இரவல் சிந்தனைகளை நட்டு வாழ்க்கை நடத்துவதை  பேஷனாக்கி விட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். 

இவர் இயக்கிய ரமணா திரைப்படமே நந்தகுமார் என்பவரின் கதை. பிறகு அந்த உண்மையை தெரிந்து கொண்ட கேப்டன் விஜயகாந்த், முருகதாசிடமிருந்து சில லட்சங்களை பிடுங்கி நந்தகுமாருக்கு கொடுத்த கதையை கோடம்பாக்கம் அறியும். அதன் பிறகும் தனது நடிப்பில் தென்னவன் படத்தையும் இயக்கும் வாய்ப்பை நந்தகுமாருக்கு கொடுத்து பாவத்தை கழுவிக் கொண்டார்.

அடுத்து விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய‘கத்தி படமே என் கதைதான்’ என்று முடிந்தவரை போராடினார் கோபி நயினார். நீதிமன்றமும், வழக்கறிஞர்களும் சத்தியத்தை கொன்று சட்டத்தை நிலைநாட்டினார்கள். தோற்றுப்போனார் கோபி நயினார். இதனை அறிந்து கோபி நயினார் மீது பரிதாபம் காட்டிய நயன்தாரா தனது நடிப்பில் ‘அறம்’ படத்தை இயக்க வாய்ப்புக் கொடுத்தார். 

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வெளிவரவிருக்கும் ‘சர்கார்’ என்னுடைய கதை. திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் எனது செங்கோல் கதையை 2007 ல் பதிவும் செய்து வைத்திருக்கிறேன் எனப்போராட்டினார் வருண். சர்கார் கதையும் வருணின் செங்கொடி கதையும் ஒன்றுதான் என்று தீர விசாரித்து தீர்ப்பும் அளித்து விட்டார் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ். இந்த தீர்ப்பை அவரை தர விடாமல் தடுத்த சக்திகள் ஒருவர் இருவரல்ல. பலர். அத்தனை பேரும் தமிழ்சினிமாவின் முன்னணி இடத்தில் இருப்பவர்கள். திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்குள்ளேயே பொறுப்பில் இருக்கும் நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக இருக்கிறார். நடவடிக்கை எடுக்க விடுவாரா ரமேஷ்கண்ணா? குறுக்கே விழுந்து தடுத்தார். 

நேர்மையை நிலைநாட்டிய கே.பாக்யராஜ் தன் விசாரணையையும் தீர்ப்பையும் எழுத்து பூர்வமாகவே வருணிடம் வழங்கிவிட்டார். அது வருண் தரப்பிற்கு வழுவான ஆயுதமாக மாறியது. இதனால் கொதித்துப்போன ஏ.ஆர்.முருகதாஸ் ‘இந்த விஷயம் ஒருதலைபடசமாக உள்ளது. இரண்டு கதையும் ஒன்று என்றால் என் கதையைப் படித்தார்களா. அதாவது என்னுடைய முழுக்கதையையும்  பவுண்டடு ஸ்க்ரிப்டை பாக்யராஜ் படித்தாரா? இல்லையா? நான் அதை வரிடம் கொடுக்கவேயில்லை. மூலக்கதைக்கான ஸ்க்ரிப்டை மட்டுமே பெற்றுச் சென்றார்கள். வெறும் சினாப்ஸ் கதையை மட்டுமே வைத்துக் கொண்டு கருத்துச் செலொவது எவ்வளவு பெரிய தவறு? எனக்கு எவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்திருக்கிறீர்கள். நான் திருட்டுப் பட்டம் வாங்குவதற்காக இயக்குநராகவில்லை’ எனக் கொதித்தார் ஏ.ஆர். முருகதாஸ். 

இறுதியில் ‘சர்கார்’ படம் வருண் ராஜேந்திரனின் கதை தான் என்று ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சர்கார் படம் திரையிடும் போது, வருண் ராஜேந்திரன் பெயர் போட்டு நன்றி தெரிவிக்கப்படும் என ஏ.ஆர்.முருகதாஸ் வாக்குறுதி அளித்துள்ளார். இதைத்தானே வருண் ராஜேந்திரன் எதிர்பார்த்தார். அப்போதே இதைச் செய்திருந்தால் இவ்வளவு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. 

முன்னதாகவே, கதை திருடப்பட்டதை உறுதிபடுத்திக் கொண்டதால், ஏ.ஆர்.முருகதாஸ் மீது அதிருப்தியில் இருந்திருக்கிறார் விஜய். வருண் ராஜேந்திரன் வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு சமரசமாகப் போய்விடலாம் என ஏற்கெனவே முருகதாஸுக்கு அறிவுறுத்தி இருந்தாராம் விஜய். ஆனால், முருகதாஸ் தரப்பு நியாயவாதிகளைப் போல வெளியில் கொக்கரித்து விட்டு இப்போது நீதிமன்றத்தில் சமரசமானதால் விஜய் மட்டுமல்ல அவரது ரசிகர்களும் அதிர்ச்சியாகிக் கிடக்கிறார்கள்.  

ஏ.ஆர்.முருகதாஸ் மீதான நம்பிக்கையும் கேள்விக்குறியாகி இருக்காது. ஆனாலும், நந்தகுமார், கோபி நயினாரின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிய பிறகே அவர்களுக்கு இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் படியே வருண் ராஜேந்திரனும் கலைப்புலி தாணு தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடியதால் வந்த அதிர்ஷடம் வருண் ராஜேந்திரனுக்கு... அடுத்த யார் கதையை திருடி இயக்குநராக்கப் போகிறாரோ என கிண்டலடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்..!

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.