தனுஷின் மாரி 2 ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு!

  திஷா   | Last Modified : 30 Oct, 2018 02:59 pm
maari-2-first-look-from-november-2nd

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் பாலாஜி மோகனின் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாரி. இதில் காஜல் அகர்வால், விஜய் ஜேசுதாஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வாருகிறது. முதல் பாகத்தில் நடித்த தனுஷ் தான் இதிலும் ஹீரோ. சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 

இதன் படப்பிடிப்புகள் முடிந்து இப்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில், மாரி 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும், நவம்பர் 2-ம் தேதி வெளியாகும் என, வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 


newstm.in 


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close