சர்கார் கதை விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் திருட்டு..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 30 Oct, 2018 02:45 pm
vijay-s-father-chandrasekar-stolen-by-sarkar-s-story

’திருட்டுப்பட்டம் வாங்குவதற்காக அப்பா அம்மா என்னை பெத்துப் போடல’ என்று எரிந்து விழுந்த முருகதாஸ், அந்தர் பல்டியடித்திருக்கிறார். இன்று நீதிமன்றத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே தீர்ப்பு நமக்கு சாதகமாக வராது என்பதை புரிந்து கொண்டது தான் பல்டிக்கு காரணம். 

சன் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டதாம். ‘பிடிவாதம் வேண்டாம். ரிலீஸ் நேரத்தில் படத்துக்கு பிரச்சனை வந்தால் அது பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்’ என்று கூறப்பட்டதாம். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட முருகதாஸ், ‘கதை வருண் ராஜேந்திரன்’ என்று டைட்டில் கார்டில் போட ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து இந்தப்படத்தின் மொழி மாற்று உரிமை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வருணுக்கு கிடைக்கும். அதுவே பல கோடிகள் கொட்டும். ஆனால், இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் ஜகா வாங்கியதுதான் சர்கார் கிளைமாக்சை மிஞ்சிய கிளைமாக்ஸ்!

இது ஒருபுறமிருக்கட்டும்... வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எங்கிருந்து திருடினார் என்கிற ஆராய்ச்சியில் இறங்கிய சினிமாவுலகினருக்கு அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளன. பலரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வருண் ராஜேந்திரன் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தனது செங்கோல் கதையை 2007-ல் பதிவு செய்து வைத்திருக்கிறார். அந்த தைரியத்தில் கோடம்பாக்கத்தில் நிறைய ஹீரோக்களிடம் கதை சொன்னவர், ஒரு சந்தர்ப்பத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் செங்கோல் கதையைச் சொல்லி இருக்கிறார். ‘இவ்வளவு ஆழமான அரசியல் கதையில் விஜய் இப்போது நடிக்க முடியாது. சில காலம் பொறுங்கள்’ எனக் கூறியிருக்கிறார் எஸ்.ஏ.சி. அதன் பிறகு  அவரிடமே இரண்டு ஆண்டுகள் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார் வருண்.

பல மாதங்களுக்கு முன் விஷாலுக்காக இந்த கதையை சொல்லப் போயிருக்கிறார். அவரை அழைத்துப் போனவர், ஏ.ஆர்.முருகதாசின் ஸ்டில்கிராபர் விஜய். அருகிலிருந்து முழுக் கதையையும் கேட்ட ஸ்டில்ஸ் விஜய், அப்படியே முருகதாசிடம் ஒப்பித்ததாக சந்தேகப்படுகிறது திரைப்பட எழுத்தாளர் சங்கம். 

ஆனால், எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் இந்தக் கதை ஏ.ஆர்.முருகதாஸுக்கு சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இந்தக் கதை விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் அதே நேரத்தில் மேக்கிங் விஷயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினால் பலமாக இருக்கும் என அவரிடம் எஸ்.ஏ.சி கதையை சொல்லி இருக்கிறார்கள் என்கிறார்கள். இது திருட்டுக்கதை என பேச்சு அடிபடத் தொடங்கியதுமே வலுவாக மறுத்து வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், அப்போதே இது திருட்டுக் கதைதான் என்பதை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயிடம் உறுதியாகக் கூறியதாகவும், அதனால்தான் இந்த விவகாரத்தில் விஜய் ஒதுங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.  

வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்குனர் சர்கார் கதைக்கு உரிமை கொண்டாடி குரல் எழுப்பிய நேரத்திலேயே ஒப்புக் கொண்டிருந்தால் இவ்வளவு அவமானமும் அதிர்ச்சியும் தேவையே இருந்திருக்காது. இப்போது ஊர் உலகமே சேர்ந்து ஏ.ஆர்.முருகதாசின் இமேஜ் மீது கொத்து பரோட்டா போட்டுக் கொண்டிருக்கிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close