ஏ.ஆர்.ரஹ்மானுடன் 12 வருடங்களுக்குப் பிறகு இணையும் அஜித்?

  திஷா   | Last Modified : 30 Oct, 2018 03:09 pm
arr-ajith-reunite-again

நடிகர் அஜித் தற்போது, விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய  திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இதனைத் தொடர்ந்து, அஜித்தின் 59-வது படத்தை சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய திரைப்படங்களை இயக்கிய, வினோத் இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறாராம். இதன் ஷூட்டிங் வரும் ஜனவரியில் தொடங்குவதாகவும் சொல்லப் படுகிறது. 

இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காக இந்தத் திரைப்படம் உருவாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தத் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. 2006-ல் வெளியான வரலாறு திரைப்படத்திற்கு, ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த செய்தி உறுதியாகும் பட்சத்தில், அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். 


newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close