ஏ.ஆர்.முருகதாஸை இதற்காகத்தான் ஒதுக்கினாரா அஜித்..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 30 Oct, 2018 06:17 pm
that-s-why-ajith-has-been-given-away-by-a-r-murugadoss

எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி, குஷி படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். வாலி படப்பிடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸின் சுறுப்பை பார்த்து கதை இருந்தால் கூறுங்கள்.. என அஜித் வாய்ப்புக் கொடுத்த படம் தீனா. இந்தப்படத்தில் இருந்துதான் அஜித் தல என அழைக்கப்பட்டார். படம் ஹிட். 

 அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ரமணா. விஜயகாந்த்துக்கு முக்கியமான படமாக அமைந்தது. ஏ.ஆர்.முருகதாஸை முக்கியமான இயக்குநர் பட்டியலில் கொண்டு சேர்த்தது. ஆனால், இந்தப்படத்தின் கதை நந்தகுமார் என்கிற உதவி இயக்குநரிடம் திருடப்பட்டது என்பது ரமணா ரிலீஸ் சமயத்தில் விவகாரத்தைக் கிளப்பியது. 

பாதிக்கப்பட்ட நந்தகுமாரை அழைத்த விஜயகாந்த் காதும் காதும் வைத்தாற்போல சில லட்சங்களை ஏ.ஆர்.முருகதாஸிடம் இருந்து பெற்றுக்கொடுத்தார். அடுத்து நந்தகுமாரை இயக்குநராக்கி தென்னவர் படத்திலும் நடித்தார். இதன் பிறகு ரிடம் இருந்து திருடியதை அஜித்தும் அறிந்திருக்கிறார். இந்த விஷயங்கள் அஜித்துக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது.

அடுத்து அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படமாவது இயக்க வேண்டும் என இப்போது வரை துரத்திக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். விஜயை வைத்து மூன்று படங்களை அவர்  குறுகிய காலத்தில் இயக்கி இயக்கி விட்டாலும் பதினெட்டு ஆண்டுகளாக மீண்டும் அஜித்தை வைத்து இயக்கக் காத்துக் கிடக்கிறார் முருகதாஸ். ஆனால், அஜித் பிடிகொடுக்காமல் இருந்து வருகிறார். இடையில் ’மிரட்டல்’ எனத் தலைப்பிடப்பட்ட படத்தில் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக போஸ்டர்கள் வெளியானது.

ஆனால், அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. அடுத்து அஜித் முருகதாஸை தாவிர்த்து வருகிறார். அவர், ரமணா படத்தின் கதையை சுட்டது. அதனை மனதில் வைத்து தவிர்த்து வருகிறார் அஜித் என்கிறார்கள். இப்போது கத்தி, சர்கார் என அடுத்தடுத்து கதைத் திருட்டுப் புகார்களில் ஏ.ஆர்.முருகதாஸ்  சிக்கிக் கொண்டதால் இனி அவரது இயக்கத்தில் அஜித் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள் தமிழ் சினிமாத்துறையினர்.  

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close