பரபரப்பாக உருவாகிவரும் சந்தீப் கிஷனின் கண்ணாடி!

  திஷா   | Last Modified : 30 Oct, 2018 05:22 pm
sandeep-kishan-s-kannadi

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த 'மதுர வீரன்' திரைப்படத்தை 'V ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிறுவனம் தற்போது, அமலாபால் நடித்துவரும் 'ஆடை' எனும் திரைப்படத்தை தற்போது தயாரித்து வருகிறது. இதனையடுத்து 'ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ்'ஸுடன் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு 'கண்ணாடி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இதனை திருடன் போலீஸ், உள்குத்து ஆகிய திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இயக்குகிறார். இதில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன், ஆன்யா, ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கும் இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது. விரைவில் இதன் இசை மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
newstm.in 


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close