சர்வதேச பட விழாவில் பரியேறும் பெருமாள் !

  திஷா   | Last Modified : 30 Oct, 2018 05:44 pm
pariyerum-perumal-has-been-selected-for-iffi

கடந்த மாதம் தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியமான மாதம். அப்போது வெளியான திரைப்படங்களுள் முக்கியமான ஒன்று 'பரியேறும் பெருமாள்'. இதனை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இவர் இயக்குநர்கள் ராம் மற்றும் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இந்தத் திரைப்படத்தை, இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்திருந்தார். கதிர், ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது பரியேறும் பெருமாள் திரைப்படம் ஒரு மாதத்தைக் கடந்து கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

தமிழகம் தவிர்த்து, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் திரையிடப் பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தத் திரைப்படம், கோவாவில் நடைபெறும் 49-வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலை பரியேறும் பெருமாளின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

— pa.ranjith (@beemji) October 30, 2018

அதோடு, ராமின் பேரன்பு, செழியனின் டூலெட், பாரம் ஆகிய படங்களும் இந்த சர்வதேச பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in 
 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close