அப்பா செய்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள் விஜய் அண்ணா: சாந்தனு

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Oct, 2018 08:14 pm

actor-santhanu-tweet-about-sarkar

அப்பா செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் விஜய் அண்ணா என பாக்யராஜ் உடைய மகன் சாந்தனு ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். 

சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி உதவி இயக்குனரான வருண் ராஜேந்திரன் நீதிமன்றம் வரை சென்று போராடினார். 
'சர்கார்' படம் வருண் ராஜேந்திரனின் கதை தான் என்றும், படத்தில் அவர் பெயர் போட்டு நன்றி தெரிவிக்கப்படும் என ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் கூறியதையடுத்து 'சர்கார்' பட விவகாரம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், வருண் தரப்பிலும் நியாயம் இருக்கிறது. அவர் வளர்ந்து வரும் இயக்குநர். 10 வருடமாக சினிமாவில் வரவேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார். தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது குறித்து வருணுக்கு 10 வருடத்திற்கு முன்னதாகவே தோன்றி இக்கதையை உருவாக்கியுள்ளார் என வருணுக்கு ஆதரவாக பேசியிருந்தார். 

இந்நிலையில் நடிகரும், பாக்யராஜ் உடைய மகனுமான சாந்தனு,  “சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன்  “இல்லை” ! என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான் !  Apologies on Story reveal by appa #UnavoidableCircumstance Sincere apologies though"  தீபாவளியை கொண்டாடுவோம் Sarkar கொண்டாடுவோம் ! ” என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.