மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்த உறியடி படக்குழு

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 09:57 am

uriyadi-shooting-wrapped-just-in-36-days

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமாக 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரித்துவரும் உறியடி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வெறும் 36 நாட்களில் முடிந்தது. 

2016ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் உறியடி. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்த இந்த படத்தை விஜயகுமார் தயாரித்து, இயக்கி, இசையமைத்து நடித்தும் இருந்தார். 

சாதியை மையப்படுத்தி உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது. 

 

 

இதனையும் விஜய்குமார் இயக்கி நடிக்க உள்ளார். கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லினு.எம் படத்தொகுப்பாளராக பணிபுரிய உள்ளார். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் முடிந்துவிட்டது என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வெறும் 36  நாட்களில் படத்தை முடித்த படக்குழுவுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.