ராட்சசனில் மிரட்டிய கிறிஸ்டோபரின் உண்மை முகம்!

  திஷா   | Last Modified : 31 Oct, 2018 11:43 am
ratsasan-villain-revealed-vishnu-s-tweet

முண்டாசுப்பட்டி திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் ராம்குமார் இயக்கியிருந்தத் திரைப்படம் 'ராட்சசன்'. சமீபத்தில் இந்தப் படம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சைக்கோ த்ரில்லராக முற்றிலும் மாறுபட்ட களத்தில் உருவாகியிருந்த ராட்சசனை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். 

இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார் விஷ்ணு. இவருடன் ராமதாஸ், அமலாபால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். கிறிஸ்டோபர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சரவணன் என்பவர் மிரட்டியிருந்தார். 

அந்த வில்லனின் உண்மையான முகத்தைப் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால், அவரின் முகத்தை வெளியில் காட்டாமல், ரகசியம் காத்தது, ராட்சசன் படக்குழு. 

இந்தத் திரைப்படம் வெளியாகி 1 மாதம் ஆகியிருக்கும் இந்நிலையில், நேற்று கிறிஸ்டோபரின் முகம் மீடியாவுக்கும், ரசிகர்களுக்கும் காண்பிக்கப்பட்டது. 

முதலில் அவர் வெளிநாட்டு நடிகராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சரவணன் என்ற பெயரை வைத்து, அவர் நிச்சயம் தமிழகத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்கும் என்பதை யூகித்தனர். 

படத்தில் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் மிரட்டியவர், இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், மிக பவ்யமாக இருந்தார். நான் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு ராட்சசன் மிகப்பெரும் பெயரை பெற்றுத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது!
newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close