'கத்தி' படக்கதை: முருகதாஸுக்கு எதிராக அன்பு ராஜசேகரன் குடும்பத்தோடு உண்ணாவிரதம்!

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 01:40 pm

kaththi-story-row-anbu-rajasekar-fasting-with-his-family

'கத்தி' கதை தன்னுடையது தான் என்று நீண்ட நாட்களாக கூறி வந்த குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தனது குடும்பத்தோடு இன்று முதல் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கி உள்ளார். 

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜசேகர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உறவினரான இவர், விவசாயத்தை மையமாக வைத்து ‘தாக பூமி’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்தக் குறும்படத்தின் கதையை மூலமாக வைத்துதான் 'கத்தி' படத்தை எடுத்துள்ளார்கள் என்று அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

முருகதாஸுடம் துணை இயக்குநராக சேர, இந்த குறும்படத்தை அவருக்கு அனுப்பி வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்பு ராஜசேகர், படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம், விஜய், முருகதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பினேன் என்று தெரிவித்தார். மேலும், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக காப்புரிமை வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சர்கார் கதை விவகாரம் நேற்று சமரசத்தில் முடிந்தது. இதனையடுத்து தான் 4 வருடங்களாகப் போராடிக் கொண்டிருப்பதாக தெரிவித்த அன்பு, இன்று முதல் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தார். அதன்படி, இன்று அவர் குடும்பத்தோடு உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close