காப்புரிமை வழக்கில் தவறான செய்தியை பரப்ப வேண்டாம் - இளையராஜா!

  திஷா   | Last Modified : 31 Oct, 2018 02:13 pm
ilayaraja-on-copy-rights

தான் இசையமைக்கும் பாடல்களை காப்புரிமை பெறாமல் பயன்படுத்திய எக்கோ நிறுவனம் மீது, கடந்த 2014-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார் இசையமைப்பாளர் இளையராஜா. அதன்படி கப்புரிமை பெறாமல் அவரின் பாடல்களை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது. 

தற்போது இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் இளையராஜா. "என் பாடல்களை விற்கும் எக்கோ நிறுவனத்தின் மீது 2010-ம் ஆண்டு புகாரளித்தேன். அதன்படி எக்கோ நிறுவனத்திடமிருந்து சிடி-க்களை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று வெளியானது. அதில் எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் வழக்கைத்தான் ரத்து செய்திருக்கிறார்கள். எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை. அதனால் "இளையராஜா பாடல்கள் வழக்கு ரத்து", "இளையராஜா காப்புரிமை வழக்கு தள்ளுபடி" என்றெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக சில ஊடகங்கள் தவறான தகவலை அளித்து வருகிறார்கள். அதனால் இப்படி தவறான செய்தியை பரப்ப வேண்டாம் எனவும், மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு மற்றும் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

தவிர ஏற்கனவே தவறான செய்திகளை வெளியிட்டிருப்பவர்கள் மறுப்பு தெரிவிக்கும்படியும் அதில் கேட்டுக் கொண்டுள்ளார். 
newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close