சர்கார் திருட்டு... ரூ.50 லட்சம் கொடுத்து ரூ.10 கோடியை ஏமாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்.. பகீர் குற்றச்சாட்டு!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 31 Oct, 2018 02:20 pm

a-r-murugadoss-who-cheated-rs-10-crores

சர்கார் கதை திருட்டு வழக்கில் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கு கிடைக்க வேண்டிய ரூ.10 கோடி ரூபாயில் வெறும் 50 லட்சத்தை கொடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பு லாவகமாக ஏமாற்றி விட்டதாக தமிழ் திரையிலகினர் கூறுகின்றனர். 

ரமணா, கத்தி, சர்கார் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படங்கள் வேறொருவரின் கதை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், சர்கார் படத்தில் நீதிமன்றம் வரை சென்று திருட்டுக்கதைதான் என முருகதாஸே ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது. 30ம் தேதி நீதிமன்றம் செல்லும் வரை ’திருட்டுப்பட்டம் பெறுவதற்காக நான் சினிமாவிற்கு வரவில்லை’ என விடாப்பிடி காட்டி வந்த முருகதாஸ் நீதிமன்றம் வந்தபோது, சர்கார் வருண் ராஜேந்திரனின் கதைதான் என பல்டி அடித்தார். இதற்கு காரணம் சன் பிக்சர்ஸ். 

தென்னிந்திய எழுத்தாளர் சங்கம், செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்று தான் எனக் கூறி ஆதாரப்பூர்வமாக ஒரு கடிதத்தையும் வருண் ராஜேந்திரனிடம் வழங்கி இருந்தது. அதனையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆரம்பம் முதலே இந்த விவகாரத்தில் தலையிட்டு வந்த கே.பாக்யராஜை 29ம் தேதி இரவு அழைத்த சன் பிக்சர்ஸ் நிர்வாகி ஒருவர், வழக்கு விவகாரத்தை கேட்டிருக்கிறார். வருண் ராஜேந்திரன் தரப்பில் வலுவான ஆதரங்கள் இருக்கின்றன. சமரசமாக போனால் மட்டுமே படம் சிக்கல் இல்லாமல் வெளிவரும் எனக்கூறி இருக்கிறார். பின்னர் ஏ.ஆர்.முருகதாஸை அழைத்த அவர்கள் வருண் மணியன் கேட்ட 30 லட்சம் ரூபாயை கொடுத்து சமாதானம் பேசக் கூறி இருக்கிறார்கள்.  

அதே நேரம் ’கதை வருண் மணியன்’ என டைட்டில் கார்டில் இடம்பெற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதை சன் பிக்சர்ஸ் ஏறுக்கொள்ளவில்லை. அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், மீண்டும் சென்சாருக்கு அனுப்பப்பட வேண்டும். அப்படி செய்தால் குறிப்பிட்ட நாளில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. பல கோடிகள் நஷ்டமாகி விடும்’ ஆகையால் நன்றி என்று மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கூறி இருக்கிறார்கள். ஆனால், வருண் மணியன் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் வருணை சமாதானப்படுத்தி 50 லட்சம் ரூபாயை கொடுத்து விவகாரத்தை சிக்கலின்றி முடித்து வைத்துள்ளனர். 

இங்குதான் வருண் மணியன் வசமாக ஏமாற்றப்பட்டுள்ளார். பொதுவாக ஒரு படத்தின் மாற்று மொழி ரீமேக் உரிமை சில பல கோடிகளில் விற்கப்படும். அதுவும் ஏ.ஆர்.முருகதாஸ் -விஜய் காம்பினேசன் படங்கள் குறைந்த பட்சம் ஆறு, அல்லது ஏழு கோடி வரை விலை போகின்றன. தெலுங்கு, ஹிந்தி என இரண்டு மொழிகளில் மட்டுமே சர்கார் படத்தில் ரீமேக் உரிமையை விற்றால் ரூ.10 கோடிக்கும் மேல் கிடைக்கும். இந்த ரீமேக் உரிமை கதை ஆசிரியர்களுக்கே உரித்தானது. 

பட டைட்டிலில் கதை வருண் மணியன் என்று இடம்பெற்று இருந்தால் மட்டுமே அந்த உரிமை அவரைச்சேரும். இப்போதும் அந்த கிரெடிட் ஏ.ஆர்.முருகதாஸ் வசமே இருக்கிறது. மொத்தமாக 10 கோடிக்கும் மேல் கிடைக்க வேண்டிய வருண் மணியனுக்கு 50 லட்சம் ரூபாயை மட்டுமே கொடுத்து லாவகமாக ஏமாற்றி விட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்’’ என்கிறார்கள். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close