உஸ்தாத் ஹோட்டல் இயக்குநரின் அடுத்த படத்தில் விக்ரம்?

  திஷா   | Last Modified : 31 Oct, 2018 02:48 pm

vikram-s-next-with-anwar-rasheet

சாமி ஸ்கொயர் படத்தைத் தொடர்ந்து, கமல்ஹாஸன் தயாரிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம். இதனை தூங்காவனம் படத்தை இயக்கிய, ராஜேஷ் எம் செல்வா இயக்குகிறார். தவிர இயக்குநர் கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் விக்ரம் கமிட்டாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மலையாள இயக்குநர் அன்வர் ரஷீத் தான் அந்தப் படத்தை இயக்குகிறாராம். இயக்குநர் அஞ்சலி மேனனின் கதையில், அன்வர் இயக்கிய உஸ்தாத் ஹோட்டல் மிகப்பெரும் வெற்றியடைந்தது. அதோடு நிவின்பாலியின் நேரம் படத்தின் தயாரிப்பாளரும் இவர் தான். அன்வர் கடைசியாக 5 சுந்தரிகள் என்ற படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத் தக்கது. 5 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது 'ட்ரான்ஸ்' என்ற படத்தை இவர் இயக்கிக் கொண்டிருக்கிறார்.  

தற்போது விக்ரமும் அன்வரும் இணைந்து தமிழ் - மலையாளத்தில் ஒரு திரைப்படத்தை உருவாக்கப் போகிறார்களாம். இது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.


newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close