ரோகினியில் 48 மணிநேர சர்கார் மாரத்தான்!

  திஷா   | Last Modified : 31 Oct, 2018 03:24 pm
sarkar-to-play-48-hours-nonstop-at-thalapathy-vijay-fort

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. சர்கார் கதை குறித்த வழக்கும் சமரசமாகிவிட்டதால், தீபாவளி தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். 

கேரளாவிலுள்ள திரையரங்கம் ஒன்று சர்கார் ரிலீஸ் ஆகும் நாளில் 'மாரத்தானுக்கு' ஏற்பாடு செய்திருக்கிறது. அதாவது திருச்சூரிலுள்ள தள்ளிக்குளம் கார்த்திகா திரையரங்கில் 6-ம் தேதி காலை 5 மணிக்கு ஆரம்பித்து தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு சர்கார் திரையிடப்படுகிறது, மொத்தம் 8 காட்சிகள். இந்த மாரத்தானின் கடைசி காட்சி 7-ம் தேதி அதிகாலை 2.45 திரையிடப்படுகிறது. 

இதை கேரள விஜய் ஃபேன்ஸ் கொண்டாட, மறுபுறம் தமிழக விஜய் ஃபேன்ஸ் செய்வதறியாமல் யோசித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ரோகினி சில்வர் ஸ்கிரீன் திரையரங்கம் ரசிகர்களின் கவலைகளை போக்கியிருக்கிறது. ஆம், 48 மணிநேர மாரத்தானை முன்னெடுத்திருக்கிறது ரோகினி. 6 மற்றும் 7-ம் தேதி, அங்கிருக்கும் 6 ஸ்கிரீனிலும், தலா 16 காட்சிகள் திரையிடப்பட்டு, இரண்டு நாளில் மொத்தம் 96 காட்சிகள் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. 

அதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள் சென்னை விஜய் ஃபேன்ஸ்! 

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close