ஜெயம்ரவி மீண்டும் போலீஸாக மிரட்டும் அடங்கமறு!

  திஷா   | Last Modified : 31 Oct, 2018 04:10 pm
adangamaru-trailer

‘டிக் டிக் டிக்’ படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி அடங்கமறு படத்தில் நடித்திருக்கிறார். இதனை அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இது ‘ஜெயம்’ ரவியின் கேரியரில் 24-வது படம்.

இதில் ஹீரோயினாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இந்த அடங்கமறு படத்தில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் ரவி நடித்திருக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். 

தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது இதன் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. தனி ஒருவனைத் தொடர்ந்து, இதிலும் போலீஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார் ஜெயம் ரவி.  

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close