தீபாவளி ரேஸில் பின் வாங்கிய ”திமிரு புடிச்சவன்”

  திஷா   | Last Modified : 31 Oct, 2018 04:13 pm

thimiru-pudichavan-release-date-changed

இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் ‘காளி திரைப்படத்திற்கு பிறகு இசையமைப்பாளரும் நடிகருமான, விஜய் ஆண்டனி ‘திமிரு புடிச்சவன் படத்தில் நடித்துள்ளார். இதனை இயக்குநர் கணேஷா இயக்கியுள்ளார். 

போலீஸ் அதிகாரியாக வரும் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்ரேஷன்' மூலம் தயாரித்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டீசர் & பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இந்நிலையில் இந்தப் படத்தை நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்வதாக முன்பே அறிவித்திருந்தனர் படக்குழுவினர். தற்போது, இதன் வெளியீடு தள்ளிப் போயிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதாவது நவம்பர் 16-ம் தேதி திமிருபுடிச்சவன் வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தவிர, ஆண்ட்ரு லூயிஸின் 'கொலைகாரன்' மற்றும் இயக்குநர் நவீனின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் விஜய் ஆண்டனி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close